Sunday, September 20, 2009

பண்ணைக்காடு மண்ணின் மகிமை.

இராமபிரான் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த பொது, பல இடங்களில் தங்கி அந்தந்த இடங்களைப் புனிதப் படுத்தியுள்ளார். அப்படிப் புனிதப்படுத்திய தளங்களில் பன்னையம்பதியும் ஒன்று. அதனால் இங்கு வருடந்தோறும் இராம நவமி வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அதே போல் குன்று தோறும் முருகன் பழனியில் கால் வைக்கும் முன் தனது பாதங்களைப் பதித்த இடமும் பண்ணையம்பதிதான்

இந்த ஊர் மக்கள் எங்கு சென்றாலும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் முழுமையாக ஈடுபட்டு உழைத்து புகழின் உச்சியைத் தொட்டு விடுகிறார்கள். இவர்கள் எங்கு வாழ்ந்தாலும் "பண்ணை" என்ற மண்ணை மறக்காமல் தங்கள் பெயருடனோ அல்லது தாங்கள் நடத்தும் நிறுவனத்துடனோ இணைத்து தாம் பிறந்த மண்ணுக்கு நன்றியை செலுத்துகிறார்கள்.

Thursday, September 3, 2009

பண்ணைக்காடு தோற்றம்.

பண்ணைக்காடு என்னும் ஊர் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பழனி மலை என வழங்கப்படும் மலைப்பகுதியில் கீழ்மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் மலை முகடுகளிலும் மத்தியிலும் அமைந்திருக்கும் பேரூர்.

இருப்பிடம்:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பண்ணைக்காடு கிராமம், தமிழத்தின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் செல்லும் வழியில், ஊத்து என்னும் பகுதிக்கு அடுத்து 2 கி.மி. தொலைவில் பிரிந்து 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளதுதான் பண்ணையம்பட்டி என்று முன்னோர்களால் அழைக்கப்பட்ட பண்ணைக்காடு கிராமம்.

ஆரம்பத்தில் சிற்றூராக இருந்த இந்த பகுதி, ஆலடிப்பட்டி, நேரியவளவு, பேரப்பட்டி, பள்ளத்தடி, ஊரல்பட்டி என ஐந்து சிறு பகுதிகள்தான் நாளடைவில் பண்ணைக்காடு ஆனது. அதுவும் சிறு பண்ணை நிலங்கள் வைத்து வாழ்ந்து வந்ததால் பண்ணைக்காடு ஆனது.

பண்ணைக்காடு வளர்ச்சியின் தொடக்கம்

1910 -13 -இல் பிரிட்டிஷ் அரசு கொடைக்கானலுக்கு சாலை வசதி அமைத்தது. அதற்க்கு முன் தலை சுமையாகவோ, குதிரைகள் மூலமாகவோ தேவதானப்பட்டிக்கு கொண்டு சென்று பண்டமாற்றம் செய்தனர். அதன் பின்பு இங்கு மலை வாழை, காப்பி, ஆரஞ்சு , விவசாயம் செய்ய ஆரம்பித்த காலம்தான் பொன்னான காலமாக விளங்கியது. இந்தக் காலத்தில் அன்னை ஆதிபராசக்தியின் அம்சமான ஸ்ரீ காமாட்சி அம்மன் வரத்தால் வரகவியான ஸ்ரீ வையாபுரிய புலவரால் பண்ணைக்காடு பணக்காடு எனப் பாடல் பெற்ற புண்ணிய ஸ்தலம் ஆகும்.